தமிழகம்

1.சென்னை மியூசிக் அகாடமியின் நடப்பாண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பிரபல கர்னாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் அருணா சாய்ராமுக்கு வழங்கப்படுகிறது.

2.கிராமப்புறங்களில் பள்ளிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக் கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி பெற, ஊராட்சி நிர்வாக அதிகாரியான ஊராட்சி தலைவரிடம் மனு அளிக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.நாடுமுழுவதும் 76 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 450 இடங்களில் குழந்தைகள் உதவி மையங்களை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2.தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (என்ஜிடி) மண்டல அமர்வுகளில் நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணைகளை காணொலிக் காட்சியின் வாயிலாக நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டு வருகிறது.


வர்த்தகம்

1.இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக உருவாகும் என்று பொருளாதார விவகாரங்களுக் கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.


உலகம்

1.வங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  திறந்து வைத்தார்.

2.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில்  சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


விளையாட்டு

1.உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. குரோஷியா நாட்டிற்கு எதிரான பைனலில் 4–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2.பிஃபா உலகக் கோப்பை சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருது குரோஷிய வீரர் லுகா மொட்ரிக்குக்கும், சிறந்த இளம் வீரருக்கான விருது பிரான்ஸின் மாப்பேவுக்கும், அதிக கோலடித்த வீரருக்கான விருது இங்கிலாந்தின் ஹாரி கேனுக்கும், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது பெல்ஜியத்தின் கோர்டியாஸýக்கும், ஃபேர் பிளே விருது ஸ்பெயின் அணிக்கும் வழங்கப்பட்டது.

3.விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சனை வென்று ஜோகோவிச் தனது 4-ஆவது விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.


ன்றைய தினம்

  • சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
  • ஐரோப்பாவின் முதலாவது பேங்க்நோட் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
  • எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்(1930)
  • பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது(1965)
  • டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)

–தென்னகம்.காம் செய்தி குழு