Current Affairs – 16 January 2019
தமிழகம்
1.புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது.ஜல்லிக்கட்டை மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்தியா
1.பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 52 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. தற்போது சில பொதுத் துறை வங்கிகளில் 75 சதவீதத்துக்கு மேல் அரசின் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம்
1.அடுத்த பத்தாண்டுகளில், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி, இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் எனஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் ஆய்வுப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.அன்னியச் செலாவணி விகிதாச்சார அடிப்படையில், வளரும் நாடுகளின் வாங்கும் சக்தி மற்றும் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலவரப்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகம்
1.பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.
விளையாட்டு
1.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதமடித்தார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் விராட் கோலிக்கு இது 5-ஆவது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் ஆஸி.யில் அதிக சதங்கள் அடித்த இதர நாட்டு வீரர்களில் குமார் சங்ககாரா மற்றும் ரோஹித் ஷர்மாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இன்றைய தினம்
- தாய்லாந்து ஆசிரியர் தினம்
- இஸ்ரேல் கொடி நாள்
- கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது(2003)
- வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
- பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்(1761)
– தென்னகம்.காம் செய்தி குழு