தமிழகம்

1.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கும் விதமாக 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்சிரேஷ்டா ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார்.


இந்தியா

1.மத்திய நிதித்துறை மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2.ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு என்ற அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

3.மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவராக பிரமோத் சந்திர மோடி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

4.பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் ஏற்றுமதி சென்ற ஜனவரி மாதத்தில் 3.74 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.அதன்படி 2018 ஜனவரியில் 2,541 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி 2019 ஜனவரியில் 2,636 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

2.கடந்த 3 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட 55 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டதாகவும், அதில் 5 சுரங்கங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.


உலகம்

1.அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதை தடுப்பதற்காக மெக்ஸிகோவையொட்டிய எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்காக நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

2.அமெரிக்காவுடன் நிலவி வரும் வர்த்தகப் போரைத் தவிர்க்கும் பொருட்டு, அந்நாட்டு அதிகாரிகளை வாஷிங்டனில் அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு

1.தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
டர்பனில் இலங்கைக்கு எதிராக நடந்து வரும் முதல் டெஸ்டில், ஸ்டெயின் முதல் இன்னிங்ஸில் 48 ரன்களை மட்டுமே விட்டுத் தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் 434 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார்.

2.தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் சாய்னாவும்-பி.வி.சிந்துவும் மோதுகின்றனர்.


ன்றைய தினம்

  • லித்வேனியா விடுதலை தினம்(1918)
  • இந்திய திரைப்படத்துறையின் முன்னோடி தாதாசாஹெப் பால்கே இறந்த தினம்(1944)
  • கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது(2005)
  • வொலஸ் கரோத்தேர்ஸ், நைலானுக்கான காப்புரிமம் பெற்றார்(1937)
  • எக்ஸ்புளோரர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது(1961)

– தென்னகம்.காம் செய்தி குழு