இந்தியா

1.ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் தங்கள் பட்ஜெட்டில் ராணுவத்துக்காக பெரிய தொகையை ஒதுக்குகின்றன. இது தொடர்பான பட்டியலை சர்வதேச மூலாதார ஆய்வு நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ‘ராணுவ ஒதுக்கீடு-2018’ என்ற புதிய பட்டியலை இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது. சீனா 2-ம் இடத்தையும்,சவுதி அரேபியா 3-ம் இடத்தையும்,ரஷியா 4-ம் இடத்தையும்,இந்தியா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனமான லக்‌ஷய பரிவார் 6 மணி நேரத்தில் 2,501 பேருக்கு ரத்த பரிசோதனை செய்து உலக சாதனைப்படைத்துள்ளது.இதற்கு முன் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனையை இது முறியடித்தது. கலிபோர்னியா நாட்டில் ஆறு மணி நேரத்தில் 1,460 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.


உலகம்

1.கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
2.காதலர் தினத்திற்காக பிரிட்டனை சேர்ந்த விமான நிறுவனம் ஏர்பஸ் ஏ330 வானத்தில் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து ஹார்ட் வடிவத்தை வரைந்து கொண்டாடியுள்ளது.
3.நேபாளத்தின் 38-வது பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைவர் கே.பி சர்மா ஒலி நேற்று பதவியேற்றார்.
4.தென் ஆப்பிரிக்க புதிய அதிபராக துணை அதிபர் சிரில் ராமபோசா நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.1937 – வாலஸ் கரோத்தர்ஸ் நைலானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
2.1985 – இசுபுல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு