தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு அதுகுறித்த விவரங்கள் தமிழக அரசிதழில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.


இந்தியா

1.மிஸோரம் மாநிலத்தின் முதல்வராக மிஸோ தேசிய முன்னணி கட்சியின்(எம்என்எஃப்) தலைவர் ஸோரம்தங்கா சனிக்கிழமை பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

2.நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 5,000 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்பட்டிருப்பதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு டிசம்பர் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரூ.27.56 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


உலகம்

1.மேற்கு ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.

2.இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.

3.சீனாவில் போப் ஆண்டவரால் நியமிக்கப்பட்ட கத்தோலிக்க மதத் தலைவர் குவோ ஷிஜின் , தனது பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளார்.

4.போலந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படாததால், வெள்ளிக்கிழமை நிறைவடைவதாக இருந்த அந்த மாநாட்டுப் பேச்சுவார்த்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், நெதர்லாந்து 4-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவையும் சனிக்கிழமை வீழ்த்தின.

2.சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினார். அதில் அவர் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.


ன்றைய தினம்

  • தாய்லாந்து தேசிய விளையாட்டு தினம்
  • பஹ்ரைன் தேசிய தினம்(1971)
  • நேபாள அரசியலமைப்பு சட்ட தினம்(1962)
  • கசக்கிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • தாய்லாந்து ஐநா.,வில் இணைந்தது(1946)
  • தென்னகம்.காம் செய்தி குழு