தமிழகம்

1.குரூப்-4 தேர்வுக்கு வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

2.தமிழகத்தில் 500 சதுர மீட்டர் நிலப் பரப்புக்கு மேல் அல்லது 8 குடியிருப்புகளுக்கு மேல் கட்டடம் கட்டுபவர்கள் தமிழ்நாடு கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.சரக்கு-சேவை வரி (இழப்பீட்டு) அவசரச்சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்தது.

2.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சிப் பெட்டி, ஸ்மார்ட்போன், எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.


உலகம்

1.ரஷ்யாவில் மார்ச் 18 அதிபர் தேர்தல்.இதில் 4-ஆவது முறையாக புதின் போட்டி இடுகிறார்.


வர்த்தகம்

1.சரக்கு போக்­கு­வ­ரத்­திற்­கான இ – வே ரசீது நடை­முறை ஜனவரி 1 முதல்
அம­லுக்கு வர உள்­ளது.

2.நாட்டில் தொலைபேசி (Landline) சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபர் மாதத்தில் 1.75 கோடி சரிந்துள்ளதாக டிராய் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.


விளையாட்டு

1.அமெரிக்காவில் ஆடவர் பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் தேர்வு செய்யப்பட்டார்.

 


இன்றைய தினம்

1. பஹ்ரேய்ன் – தேசிய நாள் (1971)
2.வங்காள தேசம் – வெற்றி நாள் (1971)
3.கசக்ஸ்தான் – விடுதலை நாள் (1991)
4.நேபாளம் – அரசியலமைப்பு சட்ட நாள் (1962)

–தென்னகம்.காம் செய்தி குழு