தமிழகம்

1.தமிழகத்தில் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனால், மாநிலத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37-ஆக உயருகின்றன.

2.கடந்த நிதியாண்டில் 5.30 கோடி மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு அமைச்சகம் நிர்ணயித்த இலக்கை எட்டி சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது என துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன்  தெரிவித்தார்.


இந்தியா

1.ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி பதவி உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

2.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய ராணுவ கண்காணிப்புக்கு உதவக்கூடிய ஆர்.ஐ.சாட்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்னும் ஓரிரு வாரங்களில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

3.மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை விசாரித்து தீர்வு காணும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் 6 மத்திய அமைச்சர்களும், அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக இடம்பெறுவர்.


வர்த்தகம்

1.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில் பயணிகள் வாகன உற்பத்தி 13.18 சதவீதம் சரிவடைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில் மொத்த பயணிகள் வாகன உற்பத்தி 13,97,704-லிருந்து 12,13,281-ஆக குறைந்துள்ளது.

2.நாட்டின் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில், 2.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறையும் நான்கு மாதங்களில் இல்லாத வகையில், 1,343 கோடி அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.ஏற்றுமதி, 2,633 கோடி டாலராக அதிகரித்துள்ளது.


உலகம்

1.இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி அரேபியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
முன்னதாக, ஈரானிடம் இருந்துதான், இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது.

2.காற்றை சுத்தப்படுத்தக் கூடிய செயற்கை மரங்களை மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது.ஒரு செயற்கை மரம் 368 இயற்கை மரங்களுக்கு இணையாக காற்றிலுள்ள கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயோஅர்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மரங்கள், செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.


ன்றைய தினம்

  • பராகுவே சிறுவர் தினம்
  • சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)
  • சத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)

– தென்னகம்.காம் செய்தி குழு