தமிழகம்

1.சிறந்த விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர்  அறிவித்தார்.

2.நாட்டிலேயே முதன்முறையாக அதிநவீன வசதிகள் கொண்ட டிரெயின் 18′ என்ற பெயரிலான ரயில் பெட்டிகள், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) விரைவில் தயாரிக்கப்பட உள்ளன என்று அதன் பொது மேலாளர் மணி தெரிவித்தார்.

3.மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 18 மணி நேரத்தில் 1,125 கிலோ தானியங்கள், காய்கறிகள், பயறு வகைகள் அடங்கிய சாலட் புதன்கிழமை தயாரிக்கப்பட்டது.


இந்தியா

1.2022-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்(இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

2.நாட்டு மக்களில் 50 கோடி பேருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் சுதந்திர உரையின்போது அறிவித்தார்.

3.சார்ட் சர்வீஸ் கமிஷன் (எஸ்எஸ்சி) மூலம் முப்படைகளிலும் நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரிகளுக்கு, நிரந்தர ஆணையத்தை தேர்வு செய்யும் உரிமை அளிக்கப்படும் என்று பிரதமர்  அறிவித்துள்ளார்.


வர்த்தகம்

1.ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர், நரேஷ் கோயல், நிதி நெருக்­க­டிக்கு தீர்வு காணும்
நட­வ­டிக்­கை­கள் குறித்து, மத்­திய அர­சி­டம் விளக்­கி­ய­தாக தக­வல் வெளி­யா­கி­ உள்­ளது.


உலகம்

1.பிகார் மாநிலம், நலந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் திருட்டுப்போன புத்தர் சிலையை மீட்டு பிரிட்டன் காவல்துறையினர் இந்தியாவுக்கு திருப்பியளித்துள்ளனர்.


விளையாட்டு

1.அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினார்.


ன்றைய தினம்

  • பராகுவே சிறுவர் தினம்
  • சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)
  • சத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)
  • தென்னகம்.காம் செய்தி குழு