Current Affairs – 16 April 2019
தமிழகம்
1.லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இதற்கான நியமன உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
2.தமிழகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
இந்தியா
1.தேர்தல் பிரசாரத்தின்போது மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள்களும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 2 நாள்களும் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
2.பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
3.அணுகுண்டு உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 1,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் “நிர்பய்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
வர்த்தகம்
1.மொத்த விலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற மார்ச் மாதத்தில் 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, முந்தைய ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் முறையே 2.93 சதவீதம், 2.76 சதவீதமாகவும், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 2.74 சதவீதமாகவும் காணப்பட்டது.
2.நாட்டின் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் 11 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3.தைவானைச் சேர்ந்த, ‘பாக்ஸ்கான்’ நிறுவனம், இந்தியாவில் இந்தாண்டு ‘ஆப்பிள் ஐபோன்’ தயாரிப்பை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகம்
1.வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் நின்றுபோயுள்ள அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உதவிடும் வகையில் 4-ஆவது உச்சி மாநாட்டுக்கு தயார் என தென் கொரிய அதிபர் மூன்ஜே -இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் -உன்னுக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார்.
2.உலகிலேயே முதல்முறையாக நிலத்திலும், நீரிலும் செல்லும் தாக்குதல் ரக படகை சீனா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.
3.பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில், இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.
விளையாட்டு
1.2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம்
- சிரியா விடுதலை தினம்(1946)
- உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
- இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
- செர்பியப் பேரரசு, டுசான் சில்னி என்பவரால் உருவாக்கப்பட்டது(1346)
– தென்னகம்.காம் செய்தி குழு