தமிழகம்

1.தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.249 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரம் கிடைத்துள்ளது.

2.தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில்வழி மேம்பாட்டுச் சாலை அமைக்கப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

3.அமலாக்கத் துறை ஐ.ஜி.யாக எச்.எம்.ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டார்.தமிழக காவல் துறையில் பணியாற்றும் 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இந்தியா

1.மத்திய அரசின் “ஆயுஷ்மான் பாரத்’ எனும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களிடம் இருந்து யோசனைகளை மத்திய அரசு கோரியுள்ளது.

2.தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) இடம்பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி விண்ணப்பதாரர்களின் முழுப் பட்டியல்  இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


வர்த்தகம்

1.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 100 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

2.ஏற்றுமதி வளர்ச்சிக்காக, ரூ.50,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


உலகம்

1.இந்தியா- ஸ்விட்சர்லாந்து இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.
அரசுமுறைப் பயணமாக, ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், பெர்ன் நகரில் அந்நாட்டு அதிபர் உல்ரிக் மாரரை சந்தித்துப் பேசினார்.

2.சவூதி அரேபியாவிலுள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது யேமனின் ஹூதி கிளர்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அந்த ஆலைகள் தீப்பிடித்து எரிந்தன.

3.சீனாவில் கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயகப் போராட்டத்தின்போது, ராணுவ பீரங்கிகளை தனியொரு ஆளாக தடுத்து நிறுத்திவைத்திருந்த போராட்டக்காரரின் புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்த அமெரிக்க புகைப்படக் கலைஞர் சார்லி கோலே (64) மரணமடைந்தார்.


விளையாட்டு

1.உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய நட்சத்திர வீரரும், ஆசிய சாம்பியனுமான அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2.வியட்னாம் ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் செளரவ் வர்மா தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • சர்வதேச மக்களாட்சி தினம்
  • இந்திய பொறியாளர்கள் தினம்
  • தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
  • தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு தினம்(1950)

– தென்னகம்.காம் செய்தி குழு