Current Affairs – 15 September 2018
தமிழகம்
1.சென்னை சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.திமுகவின் முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவதாக அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியா
1.காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.185 கோடி செலவில் கட்டப்பட்ட ஐ.சி.ஜி.எஸ். விஜயா’ என்ற அதிநவீன புதிய ரோந்துக் கப்பலை சென்னையில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
2.புவி கண்காணிப்புக்கான இரண்டு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை இரவு விண்ணில் ஏவப்பட உள்ளது.
3.ஐ.நா. மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசையில் இந்தியா ஓரிடம் முன்னேறி 130-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
4.வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதாக, கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள அரசால் கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகம்
1.பொது நிறுவனங்கள், அவற்றின் நிர்வாகிகளின் ஊதியத்தை உயர்த்த, இனி மத்திய அரசின்
அனுமதி தேவை இல்லை.
2.உலகளவில், குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
3.2025-ஆம் ஆண்டுக்குள் இருவழி முதலீட்டு இலக்கை ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடியாக உயர்த்த இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது.
உலகம்
1.அமெரிக்க கருவூலத் துறையின் உதவி செயலர் பதவிக்கு இந்திய அமெரிக்கர் விமல் படேல் பெயரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
2.இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்க ஆளுகையின் கீழ் உருவாக்கப்பட்ட ஜப்பானின் அரசியல் சாசனைத்தை மாற்றியமைக்கப் போவதாக அந்த நாட்டுப் பிரதமர் ஷின்ஸோ அபே உறுதியளித்துள்ளார்.
விளையாட்டு
1.ஸ்லோவோக்கியாவில் நடைபெறவுள்ள உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் 10 வீராங்கனைகள் உள்பட 30 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.
வரும் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை ஸ்லோவோக்கியாவில் உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
2.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தென்கொரியாவின் சங்வோன் நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற 25 மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 16 வயதே ஆன விஜயவீர் சித்து 572 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் இந்தியா 4-ஆவது இடத்தைப் பெற்றது. மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அன்ஜும் மொட்கில், அபூர்வி சந்தேலா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுளளனர்.
3.போலந்தின் கிளிவைஸ் நகரில் நடைபெறும் சர்வதேச சைலேஷியன் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் 54 கிலோ பிரிவில் இந்திய வீராங்னை மனிஷா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிச் சுற்றில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னாள் சாம்பியன் விக்டோரியாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். மேரிகோம் 48 கிலோ எடைப்பிரிவில் இறுதிக்கு முன்னேறினார்.
4.வரும் 2019-இல் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் தரவரிசை பட்டியல் எண்ணிக்கையை 32 ஆக தொடர கிராண்ட்ஸ்லாம் வாரியம் முடிவு செய்துள்ளது.
இன்றைய தினம்
- சர்வதேச மக்களாட்சி தினம்
- இந்திய பொறியாளர்கள் தினம்
- தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)
- தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் நினைவு தினம்(1950)
- தென்னகம்.காம் செய்தி குழு