இந்தியா

1.பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா ( PTI ) செய்தி நிறுவனத்தின் தலைவராக விவேக் கோயங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எக்ஸ்பிரஸ் குரூப் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.பிடிஐ செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.1893ம் ஆண்டு சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றியதின் 125ம் ஆண்டை முன்னிட்டு பிரதமர் மோடி மாணவர்களிடையே Young India New India என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.


உலகம்

1.வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கொரிய தீபகற்ப எல்லையில் அமைந்துள்ள போகாய் வளைகுடா பகுதியில் ( Bohai Bay ) சீன ராணுவம் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.
2.சர்வதேச இந்து மாநாடு காத்மாண்டுவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று அனைத்துலக மக்களாட்சி நாள் (International Day of Democracy).
ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தைக் கொடுக்கும் நோக்கில் ஐ.நா. சபை 2007ஆம் ஆண்டு நவம்பர் 8 இல் அனைத்துலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஐ அறிவித்தது. அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு என ஐ.நா. கூறுகிறது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு