தமிழகம்

1.சென்னையின் பல்வேறு பகுதிகளில் “ப்ரீபெய்டு மின் மீட்டர்’ பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தியா

1.நாட்டின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிராஞ்ஜல் பாட்டீல் (30) , கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் சார் ஆட்சியராக  பதவியேற்றார்.


வர்த்தகம்

1.மொத்தவிலை அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற செப்டம்பர் மாதத்தில் 0.33 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 1.08 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் 5.22 சதவீதமாகவும் காணப்பட்டது.

2.ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின் பங்குகள் விலை, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, சாதனை புரிந்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்தின், ஒரு பங்கின் வெளியீட்டு விலை, 320 ரூபாயாக இருந்த நிலையில், முதல் வர்த்தக நாளன்று, அதன் விலை, மும்பை பங்குச் சந்தையில், 129 சதவீதம் அதிகரித்து, 728.60 ரூபாயாக உயர்ந்தது.


உலகம்

1.இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தர் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர் கணவர்-மனைவியாவர்.
சர்வதேச அளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்களது பொருளாதார ஆய்வு சிறப்பாக உதவியதை கெளரவித்து நோபல் பரிசுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.முறைகேடு புகார்கள் எதிரொலியாக, தென்கொரிய நீதித்துறை அமைச்சர் சோ குக்  பதவி விலகினார்.


விளையாட்டு

1.இந்தியாவின் முதல்நிலை கால்பந்து போட்டியாக ஐ-லீக் போட்டிக்கு பதிலாக இந்தியன் சூப்பர லீக் (ஐஎஸ்எல்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • இந்திய இளைஞர் எழுச்சி தினம்
  • சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
  • பிரேசில் ஆசிரியர் தினம்
  • இலங்கை தேசிய மரம் நடும் தினம்
  • இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)
  • ஷீரடி சாய்பாபா சமாதி தினம்(1918)
  • டாடா விமான நிறுவனம்(தற்போதைய ஏர் இந்தியா)தனது முதலாவது விமான சேவையை துவக்கியது(1932)

– தென்னகம்.காம் செய்தி குழு