தமிழகம்

1.மின் கட்டணம் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் முறையில் செலுத்துவதை ஊக்குவிக்க பிரத்யேக மையங்களை அமைக்க வேண்டும் என மின்வாரியங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா

1.தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிடையே நிலவி வரும் நதி நீர் பகிர்வு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்ட மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தபட இருக்கிறது.

2.அடுத்த ஆண்டு ஜூலை முதல், அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரே மாதிரியான வண்ணம், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமங்களும், வாகனப் பதிவு சான்றுகளும் (ஆர்.சி. புத்தகம்) வழங்கப்படவுள்ளன.

3.பத்மஸ்ரீ, மகசேசே விருதுகளை பெற்ற சமூக ஆர்வலர் ஜோக்கின் அற்புதம் (72) காலமானார்.மும்பையில் குடிசைப் பகுதியான தாராவியில் வாழும் ஏழை மக்களின் உரிமைகளுக்காக 40 ஆண்டுகளாகப் போராடி வந்த தமிழர் ஜோக்கின் அற்புதம், பத்மஸ்ரீ, மகசேசே போன்ற விருதுகளைப் பெற்றவர்.

4.ரயில்களில் பயணிக்கும்போதே துன்புறுத்தல், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக பயணிகள் புகார் தெரிவிப்பதற்கான செல்லிடப்பேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குத் தேவையான தகவல்களைப் பெறவும், அரசு உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் 28 வகையான “மை எம்எஸ்எம்இ’ ஆன்ட்ராய்ட் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.


உலகம்

1.மலேசியாவின் நாடாளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2.அமெரிக்காவில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் பெயர் சூட்டப்படும் என பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்க தலைவர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

2.இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் சாதனைப் படைத்தார்.அடுத்தடுத்த 3 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து 5 அல்லது அதற்கு மேற்கபட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மே.இ.தீவுகளின் வீரர்கள் மைக்கெல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல் ஆகியோருக்கு இணையாக இந்த சாதனையைப் படைத்தார்.


ன்றைய தினம்

  • இந்திய இளைஞர் எழுச்சி தினம்
  • சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்
  • பிரேசில் ஆசிரியர் தினம்
  • இலங்கை தேசிய மரம் நடும் தினம்
  • இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)
  • ஷீரடி சாய்பாபா சமாதி தினம்(1918)
  • டாடா விமான நிறுவனம்(தற்போதைய ஏர் இந்தியா)தனது முதலாவது விமான சேவையை துவக்கியது(1932)
  • தென்னகம்.காம் செய்தி குழு