தமிழகம்

1.சாகித்ய அகாடமி என்ற பொதுத்துறை நிறுவனம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 6,000-க்கும் அதிகமான நூல்களை 24 மொழிகளில் வெளியிட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.

2.இயற்கை விவசாயியும், பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான நெல் ஜெயராமனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


இந்தியா

1.மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கெளடா உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக  கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ஆம் தேதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

3.சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

4.உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஃபைசாபாத் மண்டலத்தை அயோத்தியா என்றும், அலாகாபாத் மண்டலத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


வர்த்தகம்

1.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பால் உற்பத்தியில் 90 சதவீதம் பாதுகாப்பானதே என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.


உலகம்

1.உலக நாடுகள் அனைத்திலும் மரண தண்டனையை ரத்து செய்யும் நோக்கில், ஐ.நா.-வில் கொண்டுவரப்பட்ட வரைவு தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2.அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி பிரெட் கவானா ஏற்கெனவே வகித்து வந்த மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, இந்திய-அமெரிக்கப் பெண் நீதிபதியான நியோமி ஜெஹாங்கிர் ராவ் (45) பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.


விளையாட்டு

1.இன்றுமுதல் 24-ஆம் தேதி வரை உலக குத்துச்சண்டை போட்டி புது தில்லியில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

2.இங்கிலாந்தில் நடைபெறும் ஏடிபி ஃபைனல்ஸ் உலக டூர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் தங்களது ரவுண்ட் ராபின் சுற்றுகளில் வெற்றி பெற்றனர்.

3.ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • பிரேசில் குடியரசு தினம்(1889)
  • பாலஸ்தீன விடுதலை தினம்(1988)
  • இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)
  • உலகின் முதல் மைக்ரோபுரோசசரான 4004 ஐ இன்டெல் நிறுவனம் வெளியிட்டது(1971)
  • வெனிசுலா ஐநாவில் இணைந்தது(1945)
  • தென்னகம்.காம் செய்தி குழு