தமிழகம்

1.நம்ம சென்னை செயலி மூலம் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இளங்கலை வேளாண்மைப் படிப்புகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து, கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக மே 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


இந்தியா

1.உச்ச நீதிமன்றத்தின் கடந்த வார உத்தரவின்படி, காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

2.கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக ரூ.4,343 கோடியை மத்திய அரசு செலவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.


வர்த்தகம்

1.நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.58 சதவீதமாக அதிகரித்தது.

2.டெலிநார் இந்தியா நிறுவனத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைப்பதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.


உலகம்

1.இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து தனது தூதரகத்தை  ஜெருலசேம் நகருக்கு அமெரிக்கா திங்கள்கிழமை மாற்றிக் கொண்டது.


விளையாட்டு

1.ஹனோவர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கம் வென்றார்.

2.பிரபல பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ன்றைய தினம்

  • உலக குடும்ப தினம்
  • பராகுவே விடுதலை தினம்(1811)
  • மெக்சிகோ, தென்கொரியா ஆசிரியர் தினம்
  • டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)
  • மாஸ்கோவில் சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது(1935)

–தென்னகம்.காம் செய்தி குழு