தமிழகம்

1.சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவதை தவிர்க்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.


இந்தியா

1.ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு ‘பரம் விசிஷ்ட சேவா’ பதக்கம் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார்.

2.ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ள மேன் போர்டபுள் ஆன்டி டேங்க் கைடட் மிஸைல் (எம்பி-ஏடிஜிஎம்) (MP-ATGM) ஏவுகணை 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றவை. இதனை ராஜஸ்தான் பாலைவனத்தில் டிஆர்டிஓ புதன்கிழமை இரவு வெற்றிகரமாக சோதனை நடத்தியது.


வர்த்தகம்

1.இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறை நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் பிப்ரவரி மாதத்தில் 32.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

2.விப்ரோ நிறுவன தலைவர், அசிம் பிரேம்ஜி, சமூக நல முன்னேற்ற திட்டங்களுக்கு, மேலும், 52 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

3.கடந்த பிப்ரவரியில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 2.76 சதவீதம்; 2018, பிப்ரவரியில், 2.74 சதவீதமாக இருந்தது.


உலகம்

1.அமெரிக்காவின் உதவியுடன் 6 புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.

2.பிரிட்டனில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டி வால்ட் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் 2016-இல் 4-ஆவது இடம் பெற்ற தீபா (25) மிகவும் கடினமான 540 வால்ட் பிரிவில் முதன்முறையாக பங்கேற்றார்.

2.இந்தியன்வெல்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீரர்கள் ரபேல் நடால்,ரோஜர் பெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

3.சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயாசென் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


ன்றைய தினம்

  • உலக நுகர்வோர் தினம்
  • தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
  • முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே மெல்பேர்ணில் நடைபெற்றது(1877)
  • முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
  • சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)

– தென்னகம்.காம் செய்தி குழு