இந்தியா

1.ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது.மொத்தம் 156 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்த நிலையில் பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18-வது இடத்தில் உள்ளது.
2.கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ்களில் இனிமேல் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


உலகம்

1.பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் அயாஸ் சாதிக் வெளிநடப்பு செய்த வினோத சம்பவம் நடைபெற்றது.


இன்றைய தினம்

1.இன்று உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer’s Rights Day).
நுகர்வோர் என்பவர் நாம் அனைவரும்தான். பாதுகாப்பு உரிமை, கேட்கும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, இழப்பீட்டு உரிமை போன்ற பல உரிமைகள் நுகர்வோருக்கு உண்டு. தரமற்றப் பொருட்களை கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம் விற்பனை செய்வதால் பலர் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 1983ஆம் ஆண்டுமுதல் உலக நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்று கொண்டாடப்படுகிறது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு