தமிழகம்

1.தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  தில்லி வந்தடைந்தார்.

2.கட்டுப்பாட்டு அறைக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றது. .


இந்தியா

1.இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமி, இளம் படைப்பாளிகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருதுகளை  அறிவித்துள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தேவி நாச்சியப்பன், சபரிநாதன் ஆகியோர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 22 பேரும், யுவ புரஸ்கார் விருதுக்கு 23 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2.2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு திட்டம் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் சேவை துறை ஏற்றுமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,806 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

2.உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து சென்ற மே மாதத்தில் பணவீக்கம் 22 மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்துள்ளது. மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் சென்ற மே மாதத்தில் 2.45 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரலில் 3.07 சதவீதமாகவும், 2018 மே மாதத்தில் 4.78 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.

3.கடந்த ஆண்டில், இந்தியா, 2.92 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது என, ஐக்கிய நாடுகள் சபையின், வர்த்தக அறிக்கை தெரிவித்துள்ளது.

4.அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் “வால்நட்’ உள்ளிட்ட சில பருப்பு வகைகள் என 29 பொருள்களுக்கான இறக்குமதி வரி ஜூன் 16 முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.1,514 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.


உலகம்

1.கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிக்கோவுடன் பிரதமர் நரேந்திர மோடி  பேச்சுவார்த்தை நடத்தினார்.

2.இந்தியா-பாலஸ்தீனத்துக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய இந்திய வம்சாவழி நபர் ஷேக் முகமது முனீர் அன்சாரிக்கு, “ஸ்டார் ஆஃப் ஜெருசலேம்’ விருது வழங்கி கெளரவிக்கப்படும் என பாலஸ்தீன அரசு தெரிவித்திருந்தது. அதற்கான விழா ஜெருசலேமில்  நடைபெற்றது.

3.அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டி இறுதி ஆட்டத்துக்கு இந்திய, தென்னாப்பிரிக்க ஆடவர் அணிகள் தகுதி பெற்றன.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஏதுவாக புவனேசுவரத்தில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


ன்றைய தினம்

  • சர்வதேச காற்று தினம்
  • டென்மார்க் கொடி நாள்
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறந்த தினம்(1948)
  • ஐ.பி.எம் நிறுவனம் அமைக்கப்பட்டது(1911)
  • ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)

– தென்னகம்.காம் செய்தி குழு