Current Affairs – 15 June 2018
தமிழகம்
1.டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும்” என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலின் உத்தரவு செல்லாது” என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
2.அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்திருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
3.என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 300 மெகாவாட் திறனுள்ள சூரிய சக்தி மின் நிலையங்களை மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தியா
1.ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகை ஆசிரியருமான சுஜாத் புகாரி , மற்றும் அவரது பாதுகாவலர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
வர்த்தகம்
1.கடந்த,மே மாதம், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, ஏப்ரலில், 3.18 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மே மாதம், 2.26 சதவீதமாகவும் இருந்தது.
2.அமெரிக்காவின், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக,
சென்னையைச் சேர்ந்த, திவ்யா சூர்யதேவரா நியமிக்கப்பட்டுள்ளார்
உலகம்
1. ரஷ்ய அதிபர் அழைப்பின் பேரில் விரைவில் ரஷ்யா செல்கிறார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்
விளையாட்டு
1.உலகக் கோப்பை கால்பந்து 2018 மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது.
2.உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார் ஷிகர் தவன்.
இன்றைய தினம்
- சர்வதேச காற்று தினம்
- டென்மார்க் கொடி நாள்
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறந்த தினம்(1948)
- ஐ.பி.எம் நிறுவனம் அமைக்கப்பட்டது(1911)
- ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)
–தென்னகம்.காம் செய்தி குழு