Current Affairs – 15 July 2019
தமிழகம்
1.தமிழகத்தில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுகள் அண்மையில் கணக்கெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் மாவட்டங்களில் 50 ஆயிரம், 60 ஆயிரம் என இருந்த பதிவுகள், தற்போது 35 ஆயிரமாகக் குறைந்துள்ளன. தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாகக் கணக்கீடு செய்கையில், பதிவுகள் காலாவதியானது, வேலை பெற்றுச் சென்றது, முந்தைய ஆண்டுகளில் இருந்த பதிவுகளையும், தற்போதைய பதிவுகளையும் ஆய்வு செய்ததில், சுமார் 20 லட்சம் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா
1.சந்திரயான்- 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மற்றொரு நாளில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2.கார்கில் தினத்தையொட்டி ரயில்வே துறை சார்பில் 10 ரயில்களில் போர் சித்திரிப்புக் காட்சிகள் இடம்பெற உள்ளதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
3.நாட்டிலேயே முதல் முறையாக, கேரளத்தில் யானைகளுக்கான மறுவாழ்வு மையம் அமையவுள்ளது. ரூ.105 கோடி செலவில் இத்திட்டப் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
4.இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதியை 2024-25-ஆம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய ராணுவ தளவாட உற்பத்தித் துறை செயலர் அஜய் குமார் கூறியுள்ளார்.
வர்த்தகம்
1.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான, தமிழ்நாடு தொழில் வணிக கமிஷனர் அலுவலகம், சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் கிடைக்க இருக்கிறது.
உலகம்
1.கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 80 சதவீத அம்சங்களை செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
2.ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விளையாட்டு
1.இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.
2.விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் போட்டியில் 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
3.அமெரிக்காவின் நெவார்க்கில் சூப்பர் மிடில்வெயிட் குத்துச்சண்டை போட்டியில் 11-ஆவது தொடர் வெற்றியைப் பெற்றார் விஜேந்தர் சிங்.
4.செக்.குடியரசின் காட்னோ நகரில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 200 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹிமாதாஸ். இது 2 வாரங்களில் அவர் வெல்லும் 3-ஆவது தங்கமாகும்.
5.துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்று வரும் யாசர்டோகு சர்வதேச மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை வினேஷ் போகட்.
இன்றைய தினம்
- தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903)
- மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
- தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
- இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)
– தென்னகம்.காம் செய்தி குழு