Current Affairs – 15 July 2018
தமிழகம்
1.பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி.,) கலைத்து விட்டு, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மதுரையில் ஒரு வாரம் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை திங்கள்கிழமை (ஜூலை 16) தொடங்குகிறது.
இந்தியா
1.முன்னாள் எம்.பி. ராம் ஷகல், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் ராகேஷ் சின்ஹா, பாரம்பரிய நடனக் கலைஞர் சோனல் மான்சிங், சிற்பக் கலைஞர் ரகுநாத் மொகாபத்ரா ஆகிய 4 பேருக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி அளிப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
2.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு செல்லும் ஹஜ் யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது.
வர்த்தகம்
1.அன்னிய, ‘ஆன்லைன்’ நிறுவனங்கள், இந்தியாவில் ஈட்டும், குறிப்பிட்ட வரம்பிற்கு மேற்பட்ட வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப, வரி விதிப்பது குறித்து, கருத்து தெரிவிக்குமாறு, மத்திய நேரடி வரிகள் வாரியம் கோரியுள்ளது.
2.நடப்பு நிதியாண்டு, முதல் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 14.22 சதவீதம் சரிவடைந்துள்ளது.
3.பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’, நிறுவன கணக்குகளைத் தணிக்கை செய்யும், ‘ஆடிட்டர்’களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
உலகம்
1.வங்கதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்துப் பேசினார்.
2.பஹ்ரைன் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.
விளையாட்டு
1.பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மாஸ்கோவில் நடைபெறுகிறது.
2.கத்தார் நாட்டில் வரும் 2022-ஆம் ஆண்டு நவ. 21 முதல் டிச 18-ஆம் தேதி வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் என பிஃபா தலைவர் ஜியானி இன்பேன்டினோ தெரிவித்துள்ளார்.
3.விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இன்றைய தினம்
- தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜர் பிறந்த தினம்(1903)
- மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
- தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
- இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)
–தென்னகம்.காம் செய்தி குழு