தமிழகம்

1.கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு ஜன.20-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

2.தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


இந்தியா

1.பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம், நாடு முழுவதும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

2.நாடு முழுவதும் உள்ள கணினிகளை கண்காணிப்பதற்கு எதிரான பொது நல மனுக்கள் தொடர்பாக, 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

3.மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. அனந்த்(61) திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

4.பிரதமர் மோடியின் சிறந்த தலைமைப்பண்பைப் பாராட்டும் வகையில், அவருக்கு பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது வழங்கப்பட்டுள்ளது.

5.மத்திய நிதித்துறை செயலர் அஜய் நாராயண் ஜாவுக்கு ஒரு மாத காலம் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.பயணிகள் வாகன விற்பனை டிசம்பர் மாதத்தில் லேசான தொய்வு நிலையைக் கண்டுள்ளது. கடந்த டிசம்பரில் 2,38,692 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. 2017 டிசம்பரில் விற்பனையான 2,39,723 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவானதாகும்.

2.நாட்டின் பணவீக்கம் சென்ற டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது.

3.இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற டிசம்பர் மாதத்தில் 89.36 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.


உலகம்

1.சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2.ஊழல் வழக்கில் நவாஸ் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஊழல் தடுப்பு அமைப்பின் மேல் முறையீட்டு மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.


விளையாட்டு

1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் பெடரர், ரபேல் நடால், மரியா ஷரபோவா ஆகியோர் தத்தமது முதல் சுற்று ஆட்டங்களில் வென்றுள்ளனர்.

2.லா லிகா கால்பந்து போட்டியில் 400-ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.

3.ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி.


ன்றைய தினம்

  • இந்திய ராணுவ தினம்
  • விக்கிப்பீடியா துவங்கப்பட்டது(2001)
  • மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(2005)
  • பிரிட்டன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது(1759)
  • ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்(1892)

– தென்னகம்.காம் செய்தி குழு