தமிழகம்

1.தமிழகம் முழுவதும் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய செல்லிடப்பேசி சேவையை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது.

2.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் கே.பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்தியா

1.பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது.

2.மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த சுஷீல் சந்திரா, தற்போது தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வரத்து அதிகரிப்பால் கேரள சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஆண்டு ரூ. 36 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

4.கர்நாடக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, 2019-20-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதம் எதுவுமில்லாமல், பாஜக எம்எல்ஏக்களின் போராட்டத்துக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

5.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி  தில்லி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.


வர்த்தகம்

1.நாட்டின் பணவீக்கம் சென்ற ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக குறைந்துள்ளது.


உலகம்

1.ஆர்ஜென்டீனா அதிபர் மௌரிசியோ மேக்ரி, இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வரும் 17ஆம் தேதி இந்தியா வருகிறார்.

2.தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரிகளின் பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலித்தீனை மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கார்பனாக மாற்றும் வழிமுறையை அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.


விளையாட்டு

1.கவுஹாட்டியில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.


ன்றைய தினம்

  • செர்பியா தேசிய தினம்
  • யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(2005)
  • அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது(1764)
  • ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது(1994)

– தென்னகம்.காம் செய்தி குழு