தமிழகம்

1.மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது.

2.தமிழகத்தில் பள்ளிக் கல்வி தொடர்பான விஷயங்களை ஒளிபரப்புவதற்காக கல்வித் தொலைக்காட்சி பொங்கல் திருநாளில் தொடங்கப்படவுள்ளது.


இந்தியா

1.ரஃபேல் போர் விமானக் கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2.ராஜஸ்தான் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் மூன்றாவது முறையாக ராஜஸ்தான் முதல்வர் பதவியை ஏற்க இருக்கிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டார்.

3.மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் வரும் 17-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

4.நுண்ணறிவு பிரிவு(ஐ. பி) மற்றும் “ரா’ அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 6 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


வர்த்தகம்

1.பொதுத் துறை வங்கிகள் ரூ.2.33 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை வசூல் செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

2.இந்தியாவின் ஏற்றுமதி சென்ற நவம்பர் மாதத்தில் 2,650 கோடி டாலராக
அதிகரித்துள்ளது.

3.நாட்டின் பொதுப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாக குறைந்துள்ளது.


உலகம்

1.வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் உயர்நிலை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரவிருக்கிறார்.

2.அமெரிக்கக் கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யவிருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

3.கருக்கலைப்புகக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா, அயர்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4.பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்கும் வகையில், அதில் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே-வின் கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் நிராகரித்தது.


விளையாட்டு

1.சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மாவும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றார்.


ன்றைய தினம்

  • ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்(1891)
  • இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம்(1950)
  • உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்(1966)
  • நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 இணைய உலாவி வெளியிடப்பட்டது(1994)
  • தென்னகம்.காம் செய்தி குழு