Current Affairs – 15 December 2017
தமிழகம்
1.மின் வாரியம், ‘கிரிட் மேப்’ எனப்படும், மின் வழித்தட கட்டமைப்பு வரைபடத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டுள்ளது.
இந்தியா
1.நாடு முழுவதும் நகர்ப் புறங்களில் இரவு 9 மணிக்கு பிறகும், கிராமப் புறங்களில் மாலை 6 மணிக்கு பிறகும் ஏடிஎம்களில் பணம் நிரப்பக் கூடாது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
2.உலகத் தெலுங்கு மாநாடு, ஹைதராபாதில் இன்று தொடங்குகிறது.
உலகம்
1.எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல், அணுஆயுத ஒழிப்பு குறித்து வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
வர்த்தகம்
1.டெபிட், கிரெடிட் கார்டு சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும்’ என, வணிகர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது.
2.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு முதல் நான்கு மாதங்களில் மாநிலங்களுக்கு ரூ.39,111 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
1.துபாய் சூப்பர் சீரிஸ் பைனல் தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பி.வி.சிந்து தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அதேவேளையில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
இன்றைய தினம்
1. சர்தார் வல்லபாய் படேல் இறந்த நாள்
–தென்னகம்.காம் செய்தி குழு