தமிழகம்

1.சிறப்பான வகையில் பணிபுரிந்த தமிழக காவல் துறையைச் சேர்ந்த மூன்று பேருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் விருதுகளும், 22 பேருக்கு பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுகளும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் 14-ஆவது இடத்தை சென்னை மாநகர் பெற்றுள்ளது.

3.மாணவ, மாணவிகள் தங்களது குறைகள், புகார்களைக் கூற கல்வித் துறை சார்பில் 14417 என்ற புதிய எண் ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


இந்தியா

1.72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 21 குண்டுகள் முழங்க கொடியேற்றினார்.

2.சுதந்திர தினத்தை முன்னிட்டு, முப்படையினர், துணை ராணுவப் படையினருக்கு 131 வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.


வர்த்தகம்

1.மத்­திய அரசு, பொதுத் துறை­யைச் சேர்ந்த, 6 நிறு­வ­னங்­களில், குறிப்­பிட்ட சத­வீத பங்­கு­களை
விற்­பனை செய்ய முடிவு செய்­துள்­ளது.

2.அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஒரு கட்டத்தில் 70.1 வரை சென்றது. இது வரலாறு காணாத சரிவாகும்.

3.இந்தியாவின் ஏற்றுமதி சென்ற ஜூலை மாதத்தில் 2,577 கோடி டாலராக (சுமார் ரூ.1.70 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவு ஏற்றுமதியான 2,254 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 14.32 சதவீதம் அதிகமாகும் என வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


விளையாட்டு

1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

2.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிச் முன்னேறியுள்ளனர்.


ன்றைய தினம்

  • இந்திய சுதந்திர தினம்(1947)
  • தென் கொரியா உருவாக்கப்பட்டது(1948)
  • இந்திய ஆன்மிகவாதி அரவிந்தர் பிறந்த தினம்(1872)
  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)
  • பஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)
  • தென்னகம்.காம் செய்தி குழு