தமிழகம்

1.நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், கிறிஸ்தவர்களின் தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2.எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இந்தியா

1.அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 99.8 சதவீதம் தேர்தல் நிதிப் பத்திரம் மூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், நடப்பாண்டின் ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலாண்டில்,27 கோடி ரூபாய் வரை, கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது


உலகம்

1.அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்டிராட்டோலாஞ்ச், முதல் முறையாக சோதனை முறையில் பறக்கவிடப்பட்டுள்ளது.

2.உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆசிய கிளப் வாலிபால் போட்டியில் புரோ வாலிபால் லீக் சாம்பியன் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கலந்து கொள்கிறது என இந்திய வாலிபால் சம்மேளன செயல் அலுவலர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


ன்றைய தினம்

  • தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது(1976)
  • உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)
  • ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)
  • சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)

– தென்னகம்.காம் செய்தி குழு