Current Affairs – 14 September 2019
தமிழகம்
1.தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றி வரும் அனைத்துப் பள்ளிகளிலும் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2.சர்வதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீனகங்கள் சங்கத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா
1.ராணுவத்துக்கு ரூ. 2,000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
2.தேஜஸ் விமானத்தை போர்க் கப்பல்களில் தரையிறக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி சோதனை வெள்ளிக்கிழமை வெற்றியடைந்தது. இது, கடற்படையில் பயன்படுத்தப்படும் தேஜஸ் விமானங்களின் செயல்பாட்டில் இது மிகப்பெரிய நாளாகும்.
வர்த்தகம்
1.இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 2,200 கோடி டாலரை (சுமார் ரூ.1.56 லட்சம் கோடி) எட்டும் என மருந்துகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (பார்மெக்ஸில்) தெரிவித்துள்ளது.
2.ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 6.05 சதவீதம் சரிந்து 2,613 கோடி டாலராக இருந்தது. இறக்குமதி 13.45 சதவீதம் குறைந்து 3,958 கோடி டாலராக காணப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,345 கோடி டாலராக குறைந்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் இது 1,792 கோடி டாலராக காணப்பட்டது.
உலகம்
1.அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, சோயா பயறு உள்ளிட்ட சில வேளாண் பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரியை நீக்குவதாக சீனா அறிவித்துள்ளது.
2.நியூஸிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக, பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்கும் சட்டத்தை அந்த நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.
விளையாட்டு
1.ரஷ்யாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெற்று வரும் உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் துரியோதன் சிங் நேகி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்றைய தினம்
- அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
- தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
- ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
- எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
- எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)
– தென்னகம்.காம் செய்தி குழு