தமிழகம்

1.தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.

2.தமிழகம் முழுவதும் 22 காவல் துணை கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை டிஜிபி தே.க. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.


இந்தியா

1.உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, வரும் அக்டோபர் 3-ஆம் தேதியன்று 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் முறைப்படி பதவியேற்கவுள்ளார்.
அடுத்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வரை அப்பதவியில் அவர் நீடிப்பார்.

2.இந்தியாவில் 328 வகை கலவை மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.


வர்த்தகம்

1.ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.18,639.29 கோடியாக அதிகரித்துள்ளது.

2.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி பதிவிறக்க வேகம் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் முதலிடத்தில் இருந்ததாக டிராய் தெரிவித்துள்ளது.


உலகம்

1.துர்க்மேனிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சரை, வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்  சந்தித்து பேசினார்.

2.அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணையமைச்சர் ஆலிஸ் வெல்ஸ் கூறினார்.


விளையாட்டு

1.ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
தென்கொரியாவின் சங்வோன் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டி நடைபெற்றுவருகிறது.


ன்றைய தினம்

  • அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்
  • தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது(1886)
  • ரஷ்யா அதிகாரப்பூர்வமாகக் குடியரசானது(1917)
  • எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது(1960)
  • எம்.எஸ்.டாஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது(2000)
  • தென்னகம்.காம் செய்தி குழு