இந்தியா

1.சமூக வலைத்தளங்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விபரங்களை சரிபார்க்கும் வகையில் வருமான வரித்துறை புராஜெக்ட் இன்சைட்டை அறிமுகம் செய்துள்ளது.இதற்கான தொழில்நுட்ப உதவிகளை L&T Infotech வழங்கியுள்ளது.
2.2018 பிப்ரவரிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கப்படும் என , லோக்நிதி அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3.மிலிட்டரி போலீஸில் பெண்களை சேர்க்கும் திட்டத்தை ராணுவம் இறுதி செய்துள்ளது.முதற்கட்டமாக ஆண்டுக்கு 52 பெண்கள் வீதம் சுமார் 800 பெண்கள் மிலிட்டரி போலீஸில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4.108 ஆம்புலன்ஸ்களில் அழைப்பாளரின் இடத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கண்டறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) அறிமுகம் செய்துள்ளது.
சோதனை அடிப்படையில் ராஜஸ்தானில் ஓடும் 108 ஆம்புலன்ஸ்களில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 740 உள்ளன. நாடு முழுவதிலும் சுமார் 23,000 ஆம்புலன்ஸ்கள் உள்ளன.


உலகம்

1.அட்லாண்டிக் கடலின் வரலாறு காணாத மிகப்பெரிய சூறாவளியான இர்மா, கரீபியன் தீவுகள், கியூபா & அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் சேதம் விளைவித்துள்ளது.ஏற்கனவே ஆகஸ்ட் இறுதியில் ஹார்வி புயல் டெக்ஸாஸ் மாகாணத்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இது ரபேல் நடாலின் 3வது யு.எஸ். ஓபன் மற்றும் 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ்ஸை வீழ்த்தி ஸ்லான் ஸ்டீஃபென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இருவரும் அமெரிக்க வீராங்கனைகள் ஆவார்.ஸ்டீஃபென்ஸ் தரவரிசையில் இல்லாமலேயே கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 5-வது வீராங்கனையாவார். (இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனிலும் தரவரிசை வழங்கப்படாத ஜெலெனா ஆஸ்டபென்கோ பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது).மகளிர் இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் – சான் யுங் ஜான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.ஹிங்கிஸ் இதுவரை 25 கிராண்டஸாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் ஒற்றையர் பிரிவில் 5 பட்டங்களும், இரட்டையர் பிரிவில் 13 பட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 7 பட்டங்களும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் Jean-Julien Rojer (நெதர்லாந்து) & Horia Tecău (ருமேனியா) ஜோடி பட்டம் வென்றுள்ளது.
2.ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் ஓபன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, எகிப்து நாட்டைச் சேர்ந்த நூர் எல் டேயிபு (Nour El Tayeb) விடம் தோல்வியடைந்தார்.


இன்றைய தினம்

1.1886 – தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.
2.2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு