தமிழகம்

1.சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வந்த 5- ஆம் கட்ட அகழாய்வுப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. 6- ஆம் கட்ட அகழாய்வுப் பணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.

2.தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.


இந்தியா

1.ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையைப் போக்குவதற்கு வேளாண் விஞ்ஞானிகளின் உதவியுடன் உள்ளூரில் விளையும் சத்தான உணவுப் பொருள்களைக் கண்டறிவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2019-20-ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

கடந்த 2017-18-இல் பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதமாகவும், 2018-19-இல் 6.8 சதவீதமாக இருந்தது. எனினும், சமீபகாலமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம், நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியைக் குறைக்கும் என்றேற பல்வேறு சா்வதேச அமைப்புகளும் கணித்திருந்தன. அந்த வகையில் இப்போது உலக வங்கியும் இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

2.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (ஐஆா்சிடிசி) பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படுகின்றன.


உலகம்

1.நேபாளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங், அந்த நாட்டுக்கு ரூ.3,410 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது இந்தியா.சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய இந்தியா, தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை வென்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தது.

2.உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மஞ்சுராணி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

3.டச்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.
உலக பாட்மிண்டன் சம்மேளனம் பிடபிள்யுஎப் உலக டூர் போட்டிகளில் ஒன்றான இப்போட்டியின் இறுதி ஆட்டம் டென்மார்க்கின் அல்மியர் நகரில் நடைபெற்றது.

4.ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இது நிகழாண்டில் அவர் வெல்லும் நான்காவது பட்டமாகும்.


ன்றைய தினம்

  • உலக தர நிர்ணய தினம்
  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  • சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)

– தென்னகம்.காம் செய்தி குழு