தமிழகம்

1.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) தினமும் 15 ரயில் வேகன்களில் நிலக்கரி அனுப்பி வைக்கப்படுவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

2.ஆசிரியர் தகுதித் தேர்வின் (“டெட்’) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3.புதிதாக 320 நீதித்துறை நடுவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 3-ஆம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3.49 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக, ஜம்முவில் உள்ள சம்பா மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2.பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி(91), மும்பையில் காலமானார்.


வர்த்தகம்

1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 91 கோடி டாலர் (ரூ.6,410 கோடி) குறைந்தது.

2.மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை கிராமுக்கு ரூ.3,146-ஆக நிர்ணயித்துள்ளது.

3.பங்­கு­கள், கடன் பத்­தி­ரங்­கள் போன்ற நிதி சார்ந்த பரி­வர்த்­த­னை­களில், நாடு முழு­வ­தும் ஒரே சீரான முத்­தி­ரைத் தாள் தீர்வை முறையை அறி­மு­கப்­ப­டுத்த, மத்­திய அரசு திட்­ட
­மிட்­டுள்­ளது.


உலகம்

1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 92 ஆண்டுகள் பழைமையான ஸ்காட்ச் விஸ்கி, 12 லட்சம் டாலருக்கு (ரூ.8.8 கோடி) ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 1926-லிருந்து புளிக்கவைக்கப்பட்டு, 1986-ஆம் ஆண்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட இது, 2010-ஆம் ஆண்டில் ரூ.1.6 கோடிக்கு விற்பனையான ஒயின் பாட்டிலின் சாதனையை முறியடித்துள்ளது.

2.முகநூல்(Facebook) சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு

1.ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டி பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.

2.ஜகார்த்தா ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

3.இந்தியா-சீன அணிகள் இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற நட்பு கால்பந்து ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது.

4.கோவையில் நடைபெற்று வரும் 21-ஆவது ஜேகே டயர், எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்தய சாம்பியன் போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம் பெற்றுள்ளார்.

5.திருச்சியில் 45ஆவது அண்ணா நினைவு மாநில செஸ் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.


ன்றைய தினம்

  • உலக தர நிர்ணய தினம்
  • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
  • சிறுவர் நூலான வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
  • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)
  • தென்னகம்.காம் செய்தி குழு