Current Affairs – 14 November 2018
தமிழகம்
1.உத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது.
இந்தியா
1.ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கௌடாவுக்கும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதலாக ஒதுக்கீடு செய்து செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2.ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்துகிறது.
3.சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
4.உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஃபைசாபாத் மண்டலத்தை அயோத்தியா என்றும், அலாகாபாத் மண்டலத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வர்த்தகம்
1.ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
உலகம்
1.இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டதற்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
2.மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வழங்கியிருந்த கெளரவம் மிக்க விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
விளையாட்டு
1.ஏடிபி பைனல்ஸ் ஒரு பகுதியாக நடைபெற்ற திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை வென்றார்.
2.2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வரும் அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டமிட்டுள்ளது.
இன்றைய தினம்
- கின்னஸ் சாதனை புத்தக நினைவு தினம்
- சர்வதேச நீரிழிவு நோய் தினம்
- இந்திய குழந்தைகள் தினம்
- இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)
- டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1996)
- செக்கோஸ்லவாக்கியா குடியரசு தினம்(1918)
- தென்னகம்.காம் செய்தி குழு