தமிழகம்

1.புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 82 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து 7 வயது மாணவர் அபிநவ் சாதனை புரிந்தார்.

2.பள்ளிக் கல்வியில் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் விற்பனை தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தியா

1.ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெ.இராமசுப்பிரமணியன், தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.என்.படேல், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆர்.எஸ்.செளஹான், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஏ.ஏ.குரேஷி உள்ளிட்டோரை நியமிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா உள்ளிட்டோர் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைந்துள்ளது.

2.எதிரி நாட்டு விமானங்கள் உள்ளிட்ட வான் இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அப்யாஸ் ஆளில்லா விமானத்தை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதித்தது.


வர்த்தகம்

1.சில்லறை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.92 சதவீதமாக அதிகரித்துள்ளது.இதற்கு முன்பு 2018 அக்டோபரில்தான் சில்லறை பணவீக்கம் 3.38 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.

2.பயணிகள் வாகன விற்பனை சென்ற ஏப்ரல் மாதத்தில் 8 ஆண்டுகள் காணாத சரிவைக் கண்டுள்ளதாக இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.


உலகம்

1.ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரீப் இருநாள் பயணமாக திங்கள்கிழமை இரவு இந்தியாவுக்கு வந்தார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர்  சந்தித்துப் பேச இருக்கிறார்.

2.சீன கடற்படையில் தலியானில் 052டி ரகத்தைச் சேர்ந்த 2 ஏவுகணை தாங்கி போர் கப்பல்கள், சேர்க்கப்பட்டன. இதன்மூலம், சீன கடற்படையில் இருக்கும் அத்தகைய கப்பல்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.


ன்றைய தினம்

  • பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
  • பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)
  • குவைத் ஐநா.,வில் இணைந்தது(1963)
  • அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது(1973)

– தென்னகம்.காம் செய்தி குழு