Current Affairs – 14 May 2018
தமிழகம்
1.அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
1.வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளின் ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக, தானியங்கி மின்னணு சோதனை நுழைவாயில்களை (இ-கேட்ஸ்) அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2.ரூ.15 ஆயிரம் கோடியில் ஆயுதங்களைத் தயாரிக்கும் திட்டத்தை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது.
3.தேசிய அளவிலும், மாநில அளவிலும் மரபணு மாதிரி வங்கிகளை (டிஎன்ஏ பேங்க்) அமைப்பது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வர்த்தகம்
1.அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்ஸன், பயன்படுத்தப்பட்ட பைக் விற்பனை சந்தையில் களமிறங்க முடிவெடுத்து விட்டது.
உலகம்
1.வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மையங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடிவெடுத்துள்ளது.
விளையாட்டு
1.மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பெட்ரா விட்டோவா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இன்றைய தினம்
- பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
- பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்(1796)
- குவைத் ஐநா.,வில் இணைந்தது(1963)
- அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது(1973)
–தென்னகம்.காம் செய்தி குழு