தமிழகம்

1.அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா

1.அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகாரத்தில் தீர்வு காணும்பொருட்டு, உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழு முன் மனுதாரர்கள் புதன்கிழமை ஆஜராகினர்.

2.வாக்காளர்கள் பட்டியலில் நாடு முழுவதும் மொத்தம் 89 கோடியே 78 லட்சத்து 11 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், 19ம் தேதி நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

2.இந்தியாவில், மூன்றாவது ஏற்றுமதி மாநிலமாக ‘தமிழகம் திகழ்கிறது; ஏற்றுமதியின் அளவு, 20 சதவீதமாக உள்ளது, என, தமிழக தொழில் துறை செயலர், முருகானந்தம் தெரிவித்தார்.

3.கடந்த பிப்ரவரியில், நாட்டின் சில்லரை பணவீக்கம், மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 2.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 2.05 சதவீதமாக இருந்தது.


உலகம்

1.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு, சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

2.பிரிட்டன் பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த திருத்தப்பட்ட பிரெக்ஸிட் மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.


விளையாட்டு

1.இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒசாகா ஆகியோர்  தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.


ன்றைய தினம்

  • இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(1879)
  • ஜெர்மன் தத்துவியலாளர் கார்ல் மார்க்ஸ் இறந்த தினம்(1883)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் இறந்த தினம்(1932)
  • ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் ஒருவர் முதன் முதலாக பயணித்தார்(1995)

– தென்னகம்.காம் செய்தி குழு