இந்தியா

1.ஆதார் கட்டாயம் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், தீர்ப்பு வரும் வரை ஆதார் கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க உள்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பாம்பியோ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2.நேபாளத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பித்யா தேவி பந்தாரி வெற்றி பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று பை தினம் (Pi Day).
பை (TT) என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் நாளை பை நாளாகக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14ஐ குறிக்கும். இந்த பையின் மதிப்பு 3.14 என்பதாகும். பை தினம் முதன்முதலாக 1988ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் மையத்தில் கொண்டாடப்பட்டது.
2.இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்(Albert Einstein Birth Anniversary Day).
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று ஜெர்மனியில் பிறந்தார். 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்டவர். இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டதோடு, குவாண்டம், புள்ளியியல், எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.

 

–தென்னகம்.காம் செய்தி குழு