தமிழகம்

1.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில்  தொடங்கி வைத்தார்.

2.குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் உத்தேச விடைப்பட்டியலில் 24 விடைகளில் தவறு உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

3.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.


இந்தியா

1.வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

2.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தயாரித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில்  வெளியிட்டார்.

3.மிஸோரத்தில் வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்வர் ஜோரம்தங்கா தாக்கல் செய்துள்ளார்.

4.மக்களவைக்கான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்.பி.க்கள் குழுவின் தலைவராக நாமா நாகேஸ்வர ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆந்திர சட்டப்பேரவை புதிய தலைவராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏ தம்மினேனி சீதாராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வர்த்தகம்

1.ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் மே மாதத்தில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

2.சீனாவின் ஸ்பிரிங் சிட்டி என்று அழைக்கப்படும் குன்மிங் நகரில், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு கண்காட்சி  தொடங்கியது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து சுமார் 3,348 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன.


உலகம்

1.இந்தியா, சீனா இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும்; அதற்காக, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கு சீனா தயாராக உள்ளது என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மாநாட்டின் இடையே சந்தித்துப் பேசினர்.

2.பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னாள் அமைச்சர் போரிஸ் ஜான்சன் அதிக வாக்குகள் பெற்று அடுத்த சுற்று வாக்கெடுப்புக்கு முன்னேறியுள்ளார்.


விளையாட்டு

1.எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பானை எதிர்கொள்கிறது இந்தியா.

2.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் நைஜீரியா, ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.


ன்றைய தினம்

  • உலக வலைப்பதிவாளர் தினம்
  • சர்வதேச ரத்தம் தான தினம்
  • அமெரிக்க கொடி நாள்
  • ஆப்கானிஸ்தான் அன்னையர் தினம்
  • ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)
  • சீனா தனது முதல் ஐதரசன் குண்டைச் சோதித்தது(1967)

– தென்னகம்.காம் செய்தி குழு