Current Affairs – 14 June 2018
தமிழகம்
1.தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது.
2.சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா
1.முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெறுவதற்காக UTSONMOBILE செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
2.பல்கலைக்கழகத்தில் நேரடியாக துணை பேராசிரியர் பணியில் சேர வரும் 2021-22- கல்வியாண்டில் இருந்து முனைவர் படிப்பு (பிஎச்டி) கட்டாயமாக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
3.இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், ஹெல்பயர் மற்றும் ஸ்டிங்கர் ரக ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவை ஆளும் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வர்த்தகம்
1.கடந்த நிதியாண்டில், 1,329 அன்னிய நிதி நிர்வாக முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் பதிவு செய்துள்ளனர்.
உலகம்
1.மாலத்தீவு முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூமுக்கு 19 மாதங்கள் சிறை தண்டனை விதித்து மாலத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விளையாட்டு
1.இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது.
2.2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டித் தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம்
- உலக வலைப்பதிவாளர் தினம்
- சர்வதேச ரத்தம் தான தினம்
- அமெரிக்க கொடி நாள்
- ஆப்கானிஸ்தான் அன்னையர் தினம்
- ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது(1962)
- சீனா தனது முதல் ஐதரசன் குண்டைச் சோதித்தது(1967)
–தென்னகம்.காம் செய்தி குழு