தமிழகம்

1.பிறப்பு முதல் இறப்பு வரையில் அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சேவைகளையும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் ஏதும் இல்லாமல் தாமாகவே முன்வந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அளித்திட பயன்படுத்தப்படும் மென்பொருளை தகுந்த முறையில் மாற்றியமைக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முடிவு செய்துள்ளது. குடிமக்கள் எண்ணைப் பெற தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் (www.tnesevai.tn.gov.in) நமது அடிப்படை விவரங்களைப் பதிவு செய்து
செல்லிடப்பேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தி மக்கள் எண் எனப்படும் தனித்துவ எண்ணைப் பெறலாம்.


இந்தியா

1.சந்திரயான்-2 விண்கலம் திங்கள்கிழமை விண்ணுக்குச் செலுத்தப்படவிருக்கிறது.அதிக எடையை விண்ணுக்குத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டதுடன் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட
ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

2.கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் (ஓடிஎஃப்- பிளஸ்) என்ற புதிய திட்டத்தை அரசு  தொடங்கி வைத்தது.


வர்த்தகம்

1.கடல் மீன் உற்பத்தி 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018-இல் 3.47 லட்சம் டன் (9 சதவீதம்) குறைந்து 34.9 லட்சம் டன்னாக இருந்தது. இதற்கு, மேற்கு வங்கம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மீன்பிடிப்பு முறையே 2.01 லட்சம் டன், 0.95 லட்சம் டன் மற்றும் 0.86 லட்சம் டன் குறைந்து போனதே முக்கிய காரணம்.

2.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 42,991 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

3.பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக கடன்பத்திரங்கள் மூலம் ரூ.55,000 கோடி திரட்ட
நபார்டு (National Bank for Agriculture and Rural Development) திட்டமிட்டுள்ளது.


உலகம்

1.பயன்பாட்டாளர்களின் ரகசிய தகவல்களைப் பாதுகாக்கத் தவறிய வழக்கில், முகநூல் நிறுவனத்துக்கு அமெரிக்க வர்த்தக ஒழுங்காற்றுக் குழு 500 கோடி டாலர் (சுமார் ரூ.34,280 கோடி) அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


ன்றைய தினம்

  • எம்.பி.,3 பெயரிடப்பட்டது(1995)
  • ஈராக் குடியரசு தினம்
  • நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  • ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன(1933)

– தென்னகம்.காம் செய்தி குழு