தமிழகம்

1.குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றோரில் சிலருடைய சான்றிதழ் குறைபாடாக இருப்பதால் அவர்கள் நேரில் வர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது.

2.ஆதார் அட்டை தொடர்பான சேவையில் சிறந்து விளங்கியதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விருது, தமிழக அஞ்சல் வட்டத்துக்கு கிடைத்துள்ளது.


இந்தியா

1.வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.


வர்த்தகம்

1.ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் முதல் காலாண்டில் ரூ.36,729 கோடியாக இருந்தது.
இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளதாவது


உலகம்

1.20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் 400 மீ. போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற 400 மீ. இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹிமா தாஸ், 51.46 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கம் வென்று சாதனை படைத்தார். சர்வதேச அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

2.ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் நிறுவனருமான நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.


விளையாட்டு

1.விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இறுதிச் சுற்றுக்கு ஜெர்மனியின் ஏ.கெர்பர், செரீனா ஆகியோர் முன்னேறினர். ஆடவர் அரையிறுதிச் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் நடால்-ஜோகோவிச் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் கெவின் ஆண்டர்சன்-ஐஸ்நர் ஆகியோர் மோதுகின்றனர்.

2.தாய்லாந்து ஓபன் சூப்பர் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்


ன்றைய தினம்

  • எம்.பி.,3 பெயரிடப்பட்டது(1995)
  • ஈராக் குடியரசு தினம்
  • நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  • ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன(1933)

–தென்னகம்.காம் செய்தி குழு