தமிழகம்

1.புதுவையில் மார்ச் 1 முதல் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்குத் தடை விதிக்க அரசு முடிவு எடுத்துள்ளது என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

2.விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.போர்க் காலங்களில் இந்தியப் படைகள் விரைந்து முன்னேறுவதற்கு வசதியாக, இந்திய-சீன எல்லைப் பகுதியில் ரூ.21,000 கோடி செலவில் 44 சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2.நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 670 நீதிபதிகள் உள்ளனர்; இவர்களில் 73 பேர் மட்டுமே பெண்கள் என்று நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.இந்தியாவை, சர்வதேச வர்த்தகச் செயல்பாடுகளுடன் முழுமையாக ஒன்றிணைக்கும் அம்சங்களுடன், விரைவில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.


உலகம்

1.நிலவில், இரவு நேரத்தின்போது நிலவும் குளிர் நிலையை சீன ஆய்வுக் கலம் அளவிடவிருப்பதாக அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2.இந்தியா-மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ், மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் 7-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக அணி 5-2 என புதுச்சேரியை வீழ்த்தி 3-ஆவது வெற்றி பெற்றது.


ன்றைய தினம்

  • மிக்கி மவுஸ் கார்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது(1930)
  • கானாவில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1972)
  • அரிமா சங்கத்தை நிறுவிய மெல்வின் ஜோன்ஸ் பிறந்த தினம்(1879)
  • விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மா பிறந்த தினம்(1949)

– தென்னகம்.காம் செய்தி குழு