தமிழகம்

1.தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழக காவல்துறையில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

2.முதல்முறையாக ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் திருப்பத்தூர் பெண் வழக்குரைஞருக்கு வட்டாட்சியர் வழங்கினார்.சிநேகா கடந்த 2017-ஆம் ஆண்டு ஜாதி, மதம் அற்றவர் என்று சான்று வழங்குமாறு விண்ணப்பித்திருந்தார்.


இந்தியா

1.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமையோடு நிறைவடைந்த நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா ஆகியவை வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதியோடு காலாவதியாகின்றன.

2.கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4,123 அரசு ஊழியர்கள் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது என்று பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

3.மத்திய இடைக்கால பட்ஜெட் 2019-20 நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேறியது. இது பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய பாஜக கூட்டணி அரசின் 6-ஆவது மற்றும் இறுதி பட்ஜெட் ஆகும்.

4.இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் நிறுவன (ஐசிஏஐ) புதிய தலைவராக கணக்குத் தணிக்கையாளர் பி.பிரஃபுல்லா சாஜத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கணக்குத் தணிக்கையாளர் அதுல் குமார் குப்தா தேர்வாகியுள்ளார்.


வர்த்தகம்

1.சமை­ய­லுக்கு பயன்­ப­டுத்­திய எண்­ணெய் கழி­வில் இருந்து தயா­ரிக்­கும் உயிரி எரி­பொ­ருளை, உயிரி டீச­லில் கலக்க வேண்­டும் என்­பதை கட்­டா­ய­மாக்­கு­வது குறித்து, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது.

2.கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.250 அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


உலகம்

1.சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

2.பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமான கோணங்களில் படமெடுப்பது பிரிட்டனில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், ஹர்ஷீல் டானி ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.


ன்றைய தினம்

  • உலக காதலர் தினம்
  • ஐ.பி.எம்., நிறுவனம் அமைக்கப்பட்டது(1924)
  • ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)
  • 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)
  • ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)

– தென்னகம்.காம் செய்தி குழு