தமிழகம்

1.தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தை கமிட்டிகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2.தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 2, 7, 10, 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்தியா

1.மத்தியப் பிரதேச முதல்வராக அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2.ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.

3.கடந்த நான்கரை ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.5,200 கோடி செலவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறியுள்ளார்.

4.ஜனவரி 1-ஆம் தேதி முதல் காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்தியது தொடர்பான தகவல்களை பாலிஸிதாரர்களுக்கு குறுந்தகவல் (SMS) மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம் (IRDAI) வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஜிசாட்-7ஏ என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோளை வருகிற 19-ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது.


வர்த்தகம்

1.காப்பீட்டு நிறுவனங்களின் மூலதன தேவை விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2.மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி மூலதனத்தை வழங்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3.இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


உலகம்

1.இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்து உத்தரவிட்டது செல்லாது; அது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2.அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு உள்ளிட்ட வழக்குகளில், நாடாளுமன்றத்திடம் உண்மையை மறைத்த குற்றங்களுக்காக, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்குரைஞரும், அவரது அந்தரங்க உதவியாளராக இருந்தவருமான மைக்கேல் கோஹெனுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

3.பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் ஈவ்ஸ் லெ டிரியன் 2 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வருகிறார்.


விளையாட்டு

1.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன.காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

2.சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அபாரமாக ஆடி உலகின் முதல்நிலை வீராங்கனை டை சூ யிங்கின் வெற்றிப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


ன்றைய தினம்

  • இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
  • ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவானது(1946)
  • நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
  • ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
  • தென்னகம்.காம் செய்தி குழு