தமிழகம்

1.சென்னையின் முதல்முறையாக ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ‘ரோபோட்’ என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக செயல்படுகின்றன.


இந்தியா

1.கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் பாகுபலி-2 முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் என்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன. இந்த வருடத்திற்கான டாப் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார்.இதேபோன்று இந்த வருடத்திற்கான டாப் நியூஸ் வரிசையில், சி.பி.எஸ்.இ. முடிவுகள், உத்தர பிரதேச தேர்தல், ஜி.எஸ்.டி. மற்றும் பட்ஜெட் ஆகியவை உள்ளன.


வர்த்தகம்

1.லண்டனைச் சேர்ந்த லெகடும் இன்ஸ்டிடியூட் ஆண்டுதோறும் வளர்ச்சி வாய்ப்புள்ள நாடுகளுக்கான குறியீட்டை வெளியிடுகிறது. 2017-க்கான ஆய்வு 149 நாடுகளில் நடத்தப்பட்டது.இதில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2.பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலோ பதவியேற்றுக் கொண்டுள்ளார்..


விளையாட்டு

1.மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் மற்றும் கேப்டனாக இருந்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவாகியது.

 

–தென்னகம்.காம் செய்தி குழு