தமிழகம்

1.கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த கலைமாமணி விருதுகள், சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைஞர்களுக்கு அளிக்கப்பட்டன.
இந்த விழாவில் 200 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

2.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.


இந்தியா

1.ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க, இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2.ஜம்மு-காஷ்மீரை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, அங்கு தொகுதி மறுவரையறை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை நடத்தியுள்ளது.

3.ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.


வர்த்தகம்

1.மோட்டார் வாகன விற்பனை சென்ற ஜூலை மாதத்தில் 19- ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.சென்ற ஜூலையில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 30.98 சதவீதம் குறைந்து 2,00,790-ஆக இருந்தது. கடந்தாண்டு ஜூலையில் இது 2,90,931-ஆக காணப்பட்டது. பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து 9 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது.
இதைத்தவிர, இருசக்கர வாகன விற்பனை 16.82 சதவீதம் குறைந்து 15,11,692-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 25.71 சதவீதம் சரிந்து 56,866-ஆகவும் இருந்தது.

2.கடந்த ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.15 சதவீதமாக குறைந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் 3.18 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலையில் 4.17 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டன.

3.முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தனது எண்ணெய் மற்றும் ரசாயன வர்த்தக துறையில் உள்ள 20 சதவீத பங்குகளை சவுதி அரேபியா நிறுவனமான அரம்கோவுக்கு விற்றுள்ளது. நிறைய கடன்களுடன் ஜியோ அறிவிப்பை தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், அந்த கடன்களை அடைப்பதற்காகவே தற்போது பங்குகளை விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

4.தங்கம் இறக்குமதி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 35.5 சதவீதம் அதிகரித்துள்ளது.80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


உலகம்

1.காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்துவிட்டார்.


விளையாட்டு

1.சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரியா ஷரபோவா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

2.எம்சிசி-அடிடாஸ் 27-ஆவது தேசிய ஜூனியர் (18 வயதுககுட்பட்ட) களிமண் தரைப் போட்டியில் சால்ஸா அஹர், தேவ் ஜாவியா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

3.இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் 2022-ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ன்றைய தினம்

  • பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • பராகுவே கொடி நாள்
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)

– தென்னகம்.காம் செய்தி குழு