தமிழகம்

1.சுதந்திர தினத்தை ஒட்டி சிறப்பாகச் செயல்படும் அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் பரிசு பதிவுத் துறைக்கும் இரண்டாவது, மூன்றாவது பரிசுகள் உணவுத் துறை, சுகாதாரத் துறைக்கும் வழங்கப்பட உள்ளன.
சிறந்த உள்ளாட்சி அமைப்புகளில், திருப்பூர் மாநகராட்சியும், நகராட்சிகளின் வரிசையில், கோவில்பட்டி, கம்பம், சீர்காழி ஆகியனவும் பரிசுகளைப் பெறவுள்ளன.


இந்தியா

1.நாடாளுமன்றம் அருகே உள்ள கான்ஸ்டிடியூஸன் கிளப்பிற்கு வெளியே ஜேஎன்யு மாணவர் அமைப்பின் தலைவர் உமர் காலித் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

2.பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின்(ஃபசல் பீம யோஜனா) தலைமை செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆஷிஷ் குமார் புடானி நியமிக்கப்பட்டுள்ளார்.

3.தேசத்தின் அபிமானமிக்க நிறுவனங்களின் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் இணையவழியில் நடத்திய ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளது.

4.மக்களவை முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான சோம்நாத் சாட்டர்ஜி (89) கொல்கத்தாவில் திங்கள்கிழமை காலமானார். 10 முறை மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்த அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


வர்த்தகம்

1.கடந்த ஜூலை மாதம், நாட்­டின் சில்­லரை பணவீக்கம், ஒன்பது மாதங்­களில் இல்லாத வகையில், 4.17 சத­வீ­த­மாக குறைந்­துள்ளது. இது, ஜூன் மாதம், 5 சத­வீதமாக இருந்­தது. எனி­னும், மறு­ம­திப்­பீட்­டில், 4.92 சத­வீ­த­மாக குறைத்துநிர்­ண­யிக்­கப்­பட்­டது.
கடந்த ஆண்டு, ஜூலை­யில், சில்­லரை பண­வீக்கம், 2.36 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.

2.சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.92 என்ற நிலைக்கு சென்றுள்ளது.


உலகம்

1.ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கார்செஸ்ஸுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தில்லியில்  பேச்சுவார்த்தை நடத்தினார்.

2.பாகிஸ்தானின் 15-ஆவது நாடாளுமன்றம் திங்கள்கிழமை முதல் முறையாகக் கூடியது.
கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 329 உறுப்பினர்கள், அந்தக் கூட்டத்தில் பதவியேற்றனர்.
நாட்டின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானும் பதவியேற்ற உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டு

1.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ரபேல் நடால், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.


ன்றைய தினம்

  • பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • பராகுவே கொடி நாள்
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)
  • தென்னகம்.காம் செய்தி குழு