தமிழகம்

1.ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் இரு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2.தமிழகத்தில் வாக்குப் பதிவின்போது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.


இந்தியா

1.ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான அறிவிப்பை இந்தியா வெளியிட்டதும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2015ஆம் ஆண்டில் பிரான்ஸில் சுமார் ரூ.1,124 கோடி (143.7 மில்லியன் யூரோ) வரி தள்ளுபடி அளிக்கப்பட்டதாக அந்நாட்டின் முன்னணி பத்திரிகையான “லீ மாண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

2.நாட்டிலேயே மிக உயரிய இடத்தில் தேர்தல் நடைபெற்ற பகுதி என்ற பெருமை அருணாச்சலப் பிரதேசத்துக்கு கிடைத்துள்ளது. அங்குள்ள லுகுதங் – முக்தோ சட்டப்பேரவைத் தொகுதிக்கான லுகுதங்க் கிராமத்தின் வாக்குப்பதிவு 13 ஆயிரத்து 583 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடத்தப்பட்டது.


வர்த்தகம்

1.அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,378 கோடி டாலராக (ரூ.28.96 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2.பொதுத் துறை வங்கிகளுக்கு, சிறந்த நிர்வாகத்திற்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான, சுயாட்சி அதிகாரத்தை வழங்கலாம் என, வங்கிகள் வாரியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

3.இந்தியாவில் வர்த்தக கடன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது; 2018ம் ஆண்டு டிசம்பர் வரை, 14.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம்

1.வெனிசூலா உளவு அமைப்பின் தலைவராக நீண்ட காலம் பொறுப்பு வகித்த ஹியூகோ கர்வஜாலை ஸ்பெயின் தலைநகர் மேட்ரிடில் அந்த நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

2.சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தலைமைத் தளபதியும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் அந்நாட்டில் கடந்த 2 நாள்களில் இரு ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

3.செவ்வாய் கிரத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு, அதன் மாதிரிகளை முதல் முறையாக சேகரித்து அமெரிக்காவின் “கியூரியாசிட்டி’ ஆய்வுக் கலம் சாதனை படைத்துள்ளது.


விளையாட்டு

1.சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நúஸாமி ஒகுஹராவிடம் தோல்வியுற்றார்.


ன்றைய தினம்

  • அங்கோலா இளைஞர்கள் தினம்
  • இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கர் பிறந்த தினம்(1891)
  • தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி இறந்த தினம்(1950)
  • நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார்(1828)

– தென்னகம்.காம் செய்தி குழு