இந்தியா

1.இந்தியாவில் முதல் முறையாக ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில் இருந்து மற்றொரு முக்கிய நகரமான விஜயவாடாவிற்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஹபர்லூப் போக்குவரத்து இணைப்பு அமைக்கப்படுகிறது.விஜயவாடா மற்றும் அமராவதி இடையிலான போக்குவரத்து நேரமானது ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜிக் மூலமாக 5 நிமிடங்களாக குறையும்.இது தொடர்பாக ஆந்திர பிரதேச மாநில அரசு, அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனமான ஹைபர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜிஸ் (எச்டிடி)யுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
2.இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( NHAI ) Punj Lloyd – Varaha நிறுவனத்துடன் இணைந்து மியான்மர் நாட்டில் Yagyi – Kalewa இடையே 120 கி.மீ. சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
3.குஜராத் பள்ளிகளில் 7 & 8 பயிலும் மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப மறுமலர்ச்சி ஏற்படுத்தும் Gyankunj திட்டத்தை அம்மாநில முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
4.தேசிய ஆரோக்ய கண்காட்சி செப்டம்பர் 08 மமுதல் செப்டம்பர் 11 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
5.மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் Antara & Chaya என இரண்டு கருத்தடை சாதனங்களை 10 மாநிலங்களில் அறிமுகம் செய்துள்ளது.நாடு முழுவதுமான பிறப்பு விகிதத்தை 2.1 ஆக 2025க்குள் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உலகம்

1.யுனெஸ்கோ செஜோங் அரசர் எழுத்தறிவுப் பரிசு (The UNESCO King Sejong Literacy Prize) இரண்டு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
01) கற்றல் மற்றும் செயல்திறன் ஆய்வு மையம் – கனடா (Centre for the Study of Learning and Performance – Canada)
02) நாங்கள் வாசிப்பை காதலிக்கிறோம் – ஜோர்டான் (We Love Reading – Jordan).
யுனெஸ்கோ கன்பியூசியஸ் எழுத்தறிவுப் பரிசு (The UNESCO Confucius Prize for Literacy ) மூன்று அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
01) AdulTICo திட்டம் – கொலம்பியா
02) குடிமக்கள் அறக்கட்டளை – பாகிஸ்தான்
03) FunDza – தென் ஆப்ரிக்கா
2.சீனா – பாகிஸ்தான் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ஷாகீன் – 6 பயிற்சி சீனாவில் நடைபெறுகிறது.
3.சிங்கப்பூரில் அனாதைக்குழந்தைகள் வளர்ப்பில், 32 ஆண்டுகள், சேவையாற்றிய இந்திராணி எலிசபெத்க்கு, ‘ சிறந்த சமூக சேவகர் ‘ விருது வழங்கப்பட்டுள்ளது.இந்திய வம்சாவளியினருக்காக நடத்தப்படும், ‘தப்லா’ பத்திரிகை, இந்த விருதை வழங்கியது.இந்திராணி எலிசபெத் சீன வம்சாவழியைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதிலேயே இந்திய வம்சாவழி குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர்.
4.தெற்காசிய பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் மாநாடு(South Asian Women Development Forum Summit) காத்மாண்டுவில் (நேபாளம்) நடைபெற உள்ளது.
5.கத்தார் நாட்டிற்கு , சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடனான பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்வதற்கு, பிரான்ஸ் நாடு Bertrand Besancenot என்பவரை மத்தியஸ்தராக (Mediator/ Negotiator ) நியமனம் செய்துள்ளது.
இவர் பிரான்சிஸ் நாட்டின் தூதுவராக சௌதி அரேபியாவில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.


இன்றைய தினம்

1.1994 – யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு